பட்டம் எல்லாம் விட்டு முடிஞ்சுது..இனி (unit test) பரீட்சை இருக்கு.அதனாலெ கொஞ்சம் பிஸி...முடிச்சுட்டு வந்து எழுதலாம்னு இருக்கேன்.நான் எழுதுனதை அம்மா திருத்திட்டு அப்புறம்தான் பப்லிஷ் பண்ணனும்னு சொல்றாங்க.நான் நல்லா தமிழ் தப்பில்லாமல் எழுதப் படிச்சப்புறம் அம்மாம்மாவுக்கு ,அய்யாம்மாவுக்கு எல்லாம் தமிழில் லெட்டர் எழுதப் போறேன்.....
வைஷ்ணவி
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
எப்போதும் அழகிதான் பழகிக்கிட்டு இருக்கேன்
அப்பா ஊர்லே இருந்து வந்துட்டாங்களே....ஒருவேளை பொங்கலுக்கு வர முடியாதுன்னு சொல்லிருந்தாங்க....இப்போ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு....இங்கே பொங்கல் அன்னிக்கு பட்டம் விடுவோம்.....காலைலேயிருந்து மொட்டை மாடிலேதான் இருப்போம்.அக்காவை ரொம்ப மிஸ் பண்றேன்...அக்கா ரொம்ப நல்லா பட்டம் விடுவாங்க...அம்மா அழகி சொல்லிக் கொடுத்ததிலிருந்து எப்போதும் அழகிதான் பழகிக்கிட்டு இருக்கேன்
சனி, 10 ஜனவரி, 2009
எல்லாருக்கும் வணக்கம்......நான் ஏழாவது படிக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்தே ஜெய்ப்பூரில் படித்ததனால் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது....எங்க அம்மா தமிழ் வாசிக்கச் சொல்லிக் கொடுத்திருக்காங்க ....இப்போ அழகி மூலமா தமிழ் எழுதவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க....தமிழ் இம்ப்ரூவ் செய்யறதுக்காக வலைப்பூ ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காங்க....தினமும் ஏதாவது தமிழில் எழுதணும்னு சொல்றாங்க....நானும் முயற்சி பண்றேன்னு சொல்லிருக்கேன்....சரியா??
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)